உள்ளூர் செய்திகள்

கையெழுத்து இயக்கம்

கோவை: அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம் (ரீடு)சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது.ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரசாத் குமார் துவக்கி வைத்தார். அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழு பகவத் குமார், ரீடு நிறுவன பொருளாளர் குருசாமி ஆகியோர் பேசினர். ரீடு நிறுவன இயக்குனர் கருப்பசாமி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அவிநாசி அனைத்து மகளிர் போலீசார், எஸ்.ஐ., கோவிந்தம்மாள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்