சட்டம் படிக்கலாம்
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. படிப்பு: பி.ஏ.எல்எல்.பி., - 5 ஆண்டுகள்அரசு கல்வி நிறுவனங்கள்:சென்னையில், புதுப்பாக்கம் மற்றும் பட்டரைபெரும்புதூரில் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி.மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி மற்றும் காரைக்குடி ஆகிய நகரங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரி. 5 ஆண்டு ஹானர்ஸ் படிப்புகள்: பி.ஏ.எல்எல்.பி., -ஹானர்ஸ்பி.பி.ஏ.எல்எல்.பி., -ஹானர்ஸ்பி.சி.ஏ.எல்எல்.பி., -ஹானர்ஸ்பி.காம்.எல்எல்.பி., -ஹானர்ஸ்கல்வி நிறுவனம்: சீர்மிகு சட்டப்பள்ளி - சென்னை, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். உதவித்தொகை திட்டங்கள்: தமிழ்நாடு அரசு எஸ்.சி.,/எஸ்.டி., உதவித்தொகை, போஸ்ட்-மெட்ரிக் உதவித்தொகை, தமிழ்நாடு முதலமைச்சர் மெரிட் உதவித்தொகை, தமிழ்நாடு அரசு பி.சி.,/எம்.பி.சி., உதவித்தொகை, இந்திய அரசு பிரதம மந்திரி மெரிட் உதவித்தொகை, விவசாயிகளின் குழந்தைகளுக்கான உதவித்தொகை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்.தகுதிகள்: ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.பி.ஏ.எல்எல்.பி., படிப்பில் சேர்க்கை பெற குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு இல்லை. அரசு விதிமுறைப்படி, இன வாரியான இட ஒதுக்கீடும், சிறப்பு இட ஒதுக்கீடும் உண்டு. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் சேர்க்கை பெற 'கிளாட்' தேர்வு மதிப்பெண் அவசியம் இல்லை; 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31விபரங்களுக்கு: www.tndalu.ac.in