உள்ளூர் செய்திகள்

பி.என்.ஒய்.எஸ்., அட்மிஷன்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணைப்புடன் செயல்படும் கல்லூரிகளில் வழங்கப்படும் 'பேச்சுலர் ஆப் நேச்சுரோபதி அண்டு யோஜிக் சயின்சஸ்' படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.படிப்பு காலம்: ஓர் ஆண்டு கட்டாய இண்டர்ன்ஷிப் உடன் மொத்தம் ஐந்தரை ஆண்டுகள்.தகுதிகள்:* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். வெளிநாட்டினர் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை.* தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராக இருத்தல் வேண்டும். தற்போது தமிழகத்தில் வசிக்கும் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராக கருதப்படமாட்டார்கள். * 6ம் வகுப்பு முதல் 12ம் வ்குப்பு வரை தமிழகத்தில் படித்தவராக இருத்தல் அவசியம்.* 2025 டிசம்பர் 31ம் தேதியின்படி 17 வயது நிரம்பியரவராக இருத்தல் வேண்டும்.* 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களையோ அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழ்நுட்பம் ஆகியவற்றுடன் இதர பாடத்தையோ படித்திருக்க வேண்டும். நீட் தேர்வு எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை.ஒதுக்கீட்டு இடங்கள்: அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள், அரசிடம் ஒப்படைக்கப்பட்ட சுயநிதி யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றிற்கு பிரத்யேக கலந்தாய்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல், சுயநிதி யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கும் தனியாக கலந்தாய்வு நடைபெறுகிறது. ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சிறப்பு இட ஒதுக்கீடு உண்டு. விண்ணப்பிக்கும் முறை: https://tnayushonline.co.in/2025/reg/ug/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 1விபரங்களுக்கு: https://tnhealth.tn.gov.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்