ஈஷாவில் வித்யாரம்பம்
தொண்டாமுத்துார்: விஜயதசமி தினத்தை யொட்டி, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி, ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவி வளாகத்தில் நடந்தது.ஈஷாவை சுற்றியுள்ள முள்ளங்காடு, தானிக்கண்டி, பட்டியார் கோவில்பதி, மடக்காடு ஆகிய பழங்குடியின கிராமத்துக் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆதியோகி, தியானலிங்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.