உள்ளூர் செய்திகள்

கல்லுாரியில் கருத்தரங்கு

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரித் தமிழ் உயராய்வு மையம், டில்லி சாகித்திய அகாடமி சார்பில் பு.ரா.புருஷோத்தம நாயடுவின் தமிழியல் பங்களிப்புகள் கருத்தரங்கு நடந்தது .கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். சாகித்திய அகாடமி செயலர் வருண் குலோட்டி வரவேற்றார்.சாகித்ய அகாடமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் தாமோதரன், பேராசிரியர் சீனிவாசன் பேசினர்.பேராசிரியர் கற்பகம், 'புருஷோத்தமனாரின் இலக்கணப் புலமை' என்ற தலைப்பிலும், பேராசிரியர்கள் திருஞானசம்பந்தம், சு.வினோத், 'கம்பராமாயண வாசிப்புத் திறத்திறன்' என்றும், பேராசிரியர் இலக்குவன், 'வைணவப் புலமை கட்டுரைகள்' என்ற தலைப்பிலும், பேராசிரியர் ஸ்ரீ தேவி, 'கட்டுரைக்கதம்பம் நுாற்சிறப்பு' என்ற தலைப்பிலும், பேராசிரியர் அருள், 'செவ்விலக்கிய மேற்கோள்கள்', பேராசிரியர் மோகனா 'பதிப்புச் செயற்பாடுகள்' என்ற தலைப்பிலும் பேசினர்.நிறைவு அமர்வில் தமிழ் உயராய்வு மைய காயத்ரிதேவி தலைமை வகித்தார். காந்தி கிராம பல்கலை தலைவர் ஆனந்தகுமார் பேசினார். பேராசிரியர் தேவிபூமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்