உள்ளூர் செய்திகள்

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை கலெக்டர், போலீஸ் துணை கண்காணிப்பாளர், உதவி வணிகவரி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு நடந்தது. இந்த தேர்வை 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் எழுதி இருந்தனர். இந்நிலையில், குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது.தேர்வு எழுதியவர்கள் https://www.tnpsc.gov.in/English/latest_results.aspx?c=4593 என்ற இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல் 28ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்