உள்ளூர் செய்திகள்

குரூப்-1 தேர்வு 2,656 பேர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 13 தேர்வு மையங்களில் நடந்த குரூப்-1 தேர்வில் 2,656 பேர் தேர்வு எழுதினர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணி (குரூப்-1) தேர்வு-1 பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதனையொட்டி கள்ளக்குறிச்சியில் 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 3,648 தேர்வாளர்கள் தேர்ழு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 2,656 பேர் தேர்வு எழுதினர்.தேர்வையொட்டி, கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில் பறக்கும் படையினர், மூன்று சுற்று கண்காணிப்பு குழுவிக்கள், 13 தேர்வுக்கூட ஆய்வு அலுவலர்கள், 13 முதன்மை கண்காணிப்பாளர்கள், 14 ஒளிப்படபதிவாளர்கள், 14 போலீசார், துணை தாசில்தார், இன்ஸ்பெக்டர் குழு மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.தேர்வு மையங்களை கலெக்டர் பிசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆர்.டி.ஓ., லுார்துசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.அதேபோல் திருவள்ளூரில் நடந்த குரூப்-1 தேர்வில் 1,619 பேர் தேர்வு எழுத வரவில்லை.மாவட்டம் முழுதும், 13 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. திருவள்ளூர் சி.எஸ்.ஐ., கவுடி மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.அவர் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 4,313 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,694 பேர் தேர்வில் பங்கேற்றனர். 1,619 பேர் தேர்வு எழுதவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்