பிளஸ் 1 தேர்வில் 95.06 சதவீதம் தேர்ச்சி; மாநில அளவில் நான்காவது இடம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 95.06 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் நான்காவது மாவட்டமாக உள்ளது.மாவட்டத்தில் 2024 ல் பிளஸ் 1 பொதுத்தேர்வு 98 மையங்களில் நடந்தது. 223 பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 441 மாணவர்களும், 11 ஆயிரத்து 887 மாணவிகளும் என 22 ஆயிரத்து 328 மாணவர்கள் தேர்வு எழுதினர்.இதில் 9656 மாணவர்களும், 11 ஆயிரத்து 568 மாணவிகளும் என 21 ஆயிரத்து 224 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 95.06 சதவீதம் பெற்று தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் 4வது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.மேலும் அரசுப் பள்ளி கள் 7, சமூக நலப்பள்ளிகள் 1, உதவி பெறும் பள்ளிகள் 16, தனியார் பள்ளிகள் 37 என 61 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாவட்ட அளவில் எம்.லோகேஷ் என்ற மாணவர் 596 மதிப்பெண்களும், ஆர்.மணீஷ் 593, வி.ஸ்ரீசக்திகோமதி, கே.அபர்ணா, எம்.சஷ்சித்ராம், கே.லக்ஷனா ஆகிய மாணவர்கள் 592 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.இயற்பியல் பாடத்தில் 24, வேதியியல் 7, கணிதம் 14, கணினி அறிவியல் 121, உயிரியல் 1, வரலாறு 2, பொருளியல் 16, வணிகவியல் 10, கணக்குப் பதிவியல் 9, வணிக கணிதம் 7, கணினி பயன்பாடுகள் 12, அடிப்படை மின் பொறியியல் 7, அடிப்படை இயந்திரவியல் 35, செவிலியல் 63, ஆடை வடிவமைப்பு பாடத்தில் 58 மாணவர்கள், வேலைவாய்ப்புத் திறன்கள் பாடத்தில் 6, தட்டச்சு பாடத்தில் 42 மாணவர்களும் சென்டம் பெற்றுள்ளனர்.