உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்க அனுமதித்த 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

சித்ரதுர்கா: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் பார்த்து எழுதுவதற்கு மாணவர்களுக்கு ஒத்துழைத்த, நான்கு ஆசிரியர்களை, மாவட்ட கல்வி துறை இணை இயக்குனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார்.மாநிலம் முழுதும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடந்து வருகிறது. முறைகேடுகளை தடுக்க, கல்வி துறை சார்பில் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது; தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி முதல்வர் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இந்நிலையில், சித்ரதுர்கா மாவட்டத்தில் செல்லகெரே மஞ்சரி முதுநிலைப் பள்ளி ஆசிரியர் ரேவண்ணா, கோசிகெரே கிராமத்தை சேர்ந்த உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ராகவேந்திரா, பி.ஓபனஹள்ளி முதன்மை துவக்க பள்ளி ஆசிரியர் சந்திரசேகர், கொர்லகுண்டே முதன்மை துவக்கப் பள்ளி ஆசிரியர் பிரகாஷ் ஆகியோர், பள்ளி மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தடுக்காமல் உதவிஉள்ளனர்.இது தொடர்பான புகார் மாவட்ட கல்வி இணை இயக்குனர் ரவிசங்கர் ரெட்டிக்கு தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், மாணவர்கள் காப்பி அடிப்பதற்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது.இதையடுத்து, நான்கு பேரையும் சஸ்பெண்ட் செய்து, சிவசங்கர் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்