உள்ளூர் செய்திகள்

பள்ளிகளுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு கூடாது: அ.தி.மு.க., வலியுறுத்தல்

புதுச்சேரி: மத்திய அரசு பள்ளிகளுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்த கூடாது என அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அ.தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்று கவர்னர், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தார். அதனையேற்று புதுச்சேரி அரசு, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் துக்கீடு வழங்க கோப்பு தயாரித்து கவர்னர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது.மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் வழங்க முன்வந்துள்ளது. ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வரப் படுகிறது. இந்நிலையில், ஆட்சியாளர்கள் இத்திட்டத்தில் சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் அதிகாரிகள் மற்றும் வருமானம் ஈட்டும் வியாபாரிகளின் குழந்தைகள் படிக்கும் மத்திய அரசின் கேந்திர வித்யாலாயா பள்ளி மாணவர்களையும் இத்திட்டத்தில் சேர்க்க ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர். இது, அரசின் நோக்கத்தை சிதைப்பதாக அமையும். புதுச்சேரி அரசு வழங்கும் 10 சதவீத உள் ஒதுக்கீடு ஏழை குடும்பத்தை சேர்ந்த மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்