உள்ளூர் செய்திகள்

10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு: விடுமுறையில் நடத்த ஆயத்தம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், சனிக்கிழமைதோறும், பள்ளிகளுக்கு முழுமையாக விடுமுறை இருந்தாலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக, அன்றைய தினம், ஏதேனும் ஒரு பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து, மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வகையில், அரையாண்டு தேர்வு விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.தலைமையாசிரியர்கள் கூறியதாவது:வரும்,24 முதல் 2025, ஜன., 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், சிறப்பு வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.தொலைதுார பகுதிகளில் இருந்து வருவது, நேரமின்மை உட்பட பல்வேறு காரணங்களைச் சுட்டிக் காட்டி ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த மறுக்கின்றனர். இதனால், அரையாண்டு தேர்வு விடுமுறையில், ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு பாடத்தை தேர்வு செய்து, சிறப்பு வகுப்பு நடத்தப்படும்.அப்போது, அந்த ஆசிரியர் மட்டும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்படுவார். கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த சிறப்பு வகுப்பு பெரிதும் பயன்படும். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு முழுமையாக பயற்சி அளிக்க முடியும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்