ஜப்பானில் 12 லட்சம் வெளிநாட்டினருக்கு வேலை
டோக்கியோ: ஜப்பானில் நிலவும் நீண்டகால தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, மற்ற நாடுகளைச் சேர்ந்த 12 லட்சம் பேருக்கு வேலை வழங்க பிரதமர் சனே தகாய்ச்சி அரசு முடிவு செய்துள்ளது.கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், கடந்த 17 ஆண்டுகளாகவே மக்கள் தொகை வெகுவாக சரிந்து வருகிறது. மேலும், அங்கு முதியோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. நாட்டின் 12.28 கோடி மக்கள் தொகையில், 100 வயதைக் கடந்தவர்கள் மட்டும் 50,000க்கும் அதிகமாக உள்ளனர்.மேலும், 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. இதனால், அந்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை என்பது பெரும் பிரச்னையாகவே உள்ளது. இந்நிலையில், ஜப்பான் அரசு வெளிநாட்டு தொழிலாளர் கொள்கையில் பெரிய மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளது.அதன்படி, 2027 - 2029 வரை இரண்டு ஆண்டுகளுக்கு 'திறன் மேம்பாட்டுக்கான வேலைவாய்ப்பு' திட்டத்தின் கீழ், 12.31 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த மாற்றம், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், நீண்டகால தங்குதலுக்கு வழி வகுக்கவும் உதவும்.