நீட்: 122 பேர் தேர்ச்சி
இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு (நீட்) முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. நாமக்கல் மாவட்டத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்ந்த, 100 பள்ளிகளில் இருந்து, 485 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில் 17 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. 466 பேர் மட்டுமே, நீட் தேர்வை எதிர்கொண்டனர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி மதிப்பெண்ணான 107க்கு மேல் 122 மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர். இவர்களில், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில், 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் பிரசாந்த், 369 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீநிதி 280 மதிப்பெண் பெற்று 2ம் இடம். குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நவீனா 201 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பெற்றுள்ளானர். நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜமீராபேகம் 257 மதிப்பெண் பெற்று 4ம் இடமும், மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரணவ் 221 மதிப்பெண் பெற்று 5ம் இடம் பிடித்துள்ளனர். 300க்கு மேல் ஒருவரும், 200க்கு மேல் 10 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 2021ம் ஆண்டில் 17 பேர், 2022ம் ஆண்டில் 22 பேர், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.