உள்ளூர் செய்திகள்

சென்னையில் ஆக.,17 எஜுகேஷன் யுஎஸ்ஏ கண்காட்சி

சென்னை: அமெரிக்க உயர்கல்வி குறித்த எஜுகேஷன் யுஎஸ்ஏ கண்காட்சி ஆக., 17 சென்னையில் நடக்கிறது.இக்கண்காட்சியில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், அமெரிக்காவில் உள்ள 80-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கலாம்.இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி கூறுகையில், அமெரிக்கா வழங்கும் கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். சேர்க்கைகள், உதவித்தொகைகள், வளாக வாழ்க்கை மற்றும் அமெரிக்காவில் கல்வி பெறுவது குறித்த பல தகவல்களை நேரடியாகப் பெறலாம். அமெரிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பை பெறலாம், என்று கூறினார்.இந்த நிகழ்வில் பங்கேற்கும் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்கள், அமெரிக்கா முழுவதும் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளில் பல்வேறு கல்வித் திட்டங்களை வழங்குகின்றன. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள், எஜுகேஷன் யுஎஸ்ஏ ஆலோசகர்கள் மற்றும் அமெரிக்க தூதரகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள், விசா விண்ணப்ப செயல்முறையைப் பற்றி அறிந்துகொள்ளவும், அமெரிக்காவில் கல்வி பெறுவது குறித்தும் வாழ்வது குறித்தும் இக்கண்காட்சியில் விளக்கப்படுகிறது.இதில் கலந்து கொள்ள https://bit.ly/EdUSAFair24Emb என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.educationusa.in இணையதளத்தை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்