உள்ளூர் செய்திகள்

ஜூலை 17ல் வேலைவாய்ப்பு முகாம்

மதுரை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 17ல் நடக்கிறது.பத்தாம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம். வேலை தேடுவோரும், வேலை அளிக்கும் நிறுவனங்களும் தங்கள் விவரங்களை http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.விருப்பமுள்ளோர் தங்கள் பயோடேட்டா, கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோக்களுடன் ஜூலை 17 காலை 10:00 மணிக்கு புதுாரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். இங்கு வேலைக்கு தேர்வு பெற்றாலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இதனால் பதிவுமூப்பும் பாதிக்காது.இந்த அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, இலவச வைபை வசதி உள்ளது. அரசு பணிக்கு தயாராகும் இளைஞர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவு செய்து பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்