பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா வங்கி விற்பனை
திண்டுக்கல்: பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா வங்கி ஏடுகள் தமிழ், ஆங்கிலத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அசோகன் கூறுகையில், "பிளஸ் 2 மாணவர்களுக்கான வினா வங்கி புத்தகம் (தமிழ், ஆங்கிலவழி) திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அரசு, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளித்தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் தேவைப்படும் பிரதிகளை வாங்கிச் செல்லலாம், என்றார்.