உள்ளூர் செய்திகள்

மார்ச் 2ல் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வுகள்

கோவை: சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச் 2ல் துவங்கவுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 2ல், டைனமிக் ரீடைல், இன்போ டெக்னாலஜி, செக்யூரிட்டி, ஆட்டோமொபைல் டெக், உள்ளிட்ட 12 விருப்ப பாடங்களும், 3ம் தேதி அறிவியல் பாடமும், 4ல் தமிழ், தெலுங்கு, பிரெஞ்ச், என்.சி.சி., 9ம் தேதி பெயிண்டிங் மற்றும் ஸ்பானிஷ், 10ம் தேதி சமூக அறிவியல், 12ம் தேதி இந்தி ஏ, பி, 16ம் தேதி கணிதம், 18ம் தேதி பல்வேறு இசை பிரிவுகள், 19ம் தேதி ஆங்கில நுட்பிரிவுகள், 25ம் தேதி தட்டச்சு பிரிவுகள் உள்ளிட்ட தேர்வுகள் நடக்கவுள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 2 முதல் ஏப்., 20 வரை தேர்வுகள் நடக்கிறது. மேலும், ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், தேர்வுகள் இன்று துவங்கி, மார்ச் 30 வரை நடக்கிறது. சி.பி.எஸ்.இ., பள்ளி தலைமையாசிரியை கீதா கூறுகையில், "மத்திய பாடத்திட்டம் என்பதால், மாநிலத்துக்கு மாநிலம் அட்டவணையில் சிறு வேறுபாடுகள் இருக்கும். பள்ளிகள் பின்பற்றும், விருப்ப பாடத்துக்கு தகுந்தவாறும், மொழித்தேர்வுக்கு தகுந்தவாறும், பள்ளிகளின் அட்டவணையிலும் வேறுபாடுகள் இருக்கும். மாணவர்கள் பள்ளிகளை நேரடியாக அணுகி, முழு விபரங்களை அறிந்துகொண்டு தேர்வுக்கு தயாராவது அவசியம்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்