பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சூரியமணல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் அபிநயா. இவர்அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இன்று வெளியான தேர்வு முடிவில் கணித பாடத்தில் தோல்வியடைந்தார். இதனால், மனமுடைந்த அவர், மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.