உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு முகாம் ஏப்.1ல் துவக்கம்

மதுரை: மதுரையில் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் ஏப்.,1 முதல் மதுரை நிர்மலா, திருமங்கலம் பி.கே.என்., ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் துவங்குகின்றன.மதுரைக்கு சி.இ.ஓ., கார்த்திகா, திருமங்கலம் முகாமிற்கு டி.இ.ஓ., சாய்சுப்புலட்சுமி முகாம் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இம்முகாம்களுக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் விடைத்தாள்கள் கொண்டு வரப்படும். அவற்றை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மதிப்பிடும் பணியில் ஈடுபடுவர். ஏப்., 1ல் பிளஸ் 2, அதை தொடர்ந்து பிளஸ் 1 விடைத்தாள்கள் திருத்தப்படவுள்ளன.மையத்தை இழந்த மதுரைதென் மாவட்டங்களுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள்களை ஷப்ளிங் (கலக்கல்) செய்து மாணவர்கள் முழு விவரம் அடங்கிய விடைத்தாளின் முகப்பு தாள் ஏ பகுதியை நீக்கம் செய்யப்படும் ஷப்ளிங் நோடல் மையம் மதுரையில் பல ஆண்டுகளாக செயல்பட்டது.ஆனால் கடந்தாண்டு பொதுத்தேர்வில் இம்மையத்தில் முறைகேடு நடந்ததால் முதல்முறையாக நோடல் மையம் சிவகங்கைக்கு மாற்றப்பட்டது.அங்கு ஷப்ளிங் செய்யப்பட்ட 10 மாவட்டங்களின் லட்சக்கணக்கான விடைத்தாள்கள் மதுரை மதிப்பீட்டு முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்