உள்ளூர் செய்திகள்

ஆங்கிலம் 2ம் தாள் செம ’ஈசி’ 10ம் வகுப்பு மாணவர்கள் ’குஷி’

உடுமலை: ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, முதல் தாளை போன்று சுலபமாக இருந்ததால், மகிழ்ச்சியுடன் தேர்வை எழுதினர். அனைத்து பகுதிகளும் ஈசியாக இருந்ததால் அதிக மதிப்பெண்களை பெறமுடியும் என பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். கடந்த, 15 ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்., 13 ம் தேதி வரைக்கும் நடைபெறுகிறது. நேற்று நடந்த ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கான தேர்வை 5,213 மாணவர்கள் எழுதினர். 133 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். தேர்வெழுதிய மாணவியரின் கருத்துவினிதா: அனைத்து வினாக்களும் சுலபமாக விடையளிக்கும் வகையில் இருந்தது. இதனால், வினாத்தாளை பார்த்தவுடனேயே சந்தோஷமாக தேர்வு எழுதினேன். ஒரு மதிப்பெண் வினாக்களும் ஈசியாக இருந்ததால் முழு மதிப்பெண் பெறமுடியும். வினாக்கள் அனைத்தும் புக்கிற்கு பின்பகுதியில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. இலக்கணம், மொழிபெயர்ப்பு, துணைப்பாட பகுதிகள் என அனைத்து வினாக்களும் தெரிந்ததாகவே இருந்தன. நன்றாக பயிற்சி பெற்றிருந்தால் நுாறு மதிப்பெண் எடுப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. கவிதா: ஆங்கிலம் முதல் தாள் சுலபமாக கேட்கப்பட்டிருந்தது. இரண்டாம் தாள் எவ்வாறு இருக்கும் என்ற ஒருவித அச்சத்துடனேயே தேர்வெழுதச்சென்றேன். வினாத்தாளை வாங்கி படித்து பார்த்தவுடன், கேள்விகள் அனைத்தும் ஈசியாக கேட்கப்பட்டிருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது. இலக்கணம் அனைவருக்கும் சற்று கடினமாக இருக்கும், அந்த பகுதியிலும் நன்கு பயிற்சி செய்த வினாக்களே கேட்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்