பிளஸ் 2 செய்முறைத தேர்வு: பிப்., 18 வரை நடக்கிறது
மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக, செய்முறைத் தேர்வுகள் நடக்கின்றன. இம்மாதம், 18ம் தேதி வரை, இந்த தேர்வுகள் நடக்கின்றன. ஒவ்வொரு தேர்வும், 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. மீதமுள்ள, 150 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடக்கும். சென்னை மாவட்டத்தில், இரு கட்டங்களாக நடக்கும் செய்முறைத் தேர்வில், 30 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். 300 மையங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன.