உள்ளூர் செய்திகள்

குரூப் 2 தேர்வு; இலவச பயிற்சி

அன்னுார்: தமிழ்நாடு அரசு பொது பணியாளர் தேர்வாணையம், குரூப் 2 தேர்வு வரும் நவம்பரில் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த அன்னுார் தாலுகாவை சேர்ந்தவர்களுக்கு, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில், இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.   தாலுகா பொறுப்பாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார். பரிஷத் கோவை கோட்ட பொறுப்பாளர் நாகிரெட்டி பேசுகையில், &'&'பண்புள்ள மாணவர்கள், அரசு பணியில் சேருவதால், அரசு நிர்வாகமும் பண்புள்ள மனிதர்களால் உருவாகும். முழு ஈடுபாட்டோடு கற்றால், குரூப் 2 தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்,&'&' என்றார். முதுகலை தமிழாசிரியர் நரசிம்ம சுப்ரமணியன் பேசுகையில், &'&'பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகங்கள், குரூப் 2 தேர்வுக்கு உதவியாக இருக்கும். தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் படிக்க வேண்டும். மாதிரி வினாத்தாட்களை எழுதிப்பார்க்க வேண்டும்,&'&' என்றார்.   நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கோபிநாத், மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.   அன்னுார் - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பரிஷத் அலுவலகத்தில், நவ., முதல் வாரம் வரை, ஒவ்வொரு ஞாயிறும், காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை வகுப்பு நடக்கும். தொடர்புக்கு: 98420 44701.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்