உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தனித்தேர்வு: விண்ணப்பிக்க 25ம் தேதியே கடைசி

பிளஸ் 2 தேர்வை தனித் தேர்வாக எழுத விரும்பும் மாணவர்கள், வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியிருப்பதாவது:மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், கடந்த 11ம் தேதி முதல் விண்ணப் பங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. தனித் தேர்வர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ, சம்பந்தபட்ட மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு இயக்குனர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்