உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களின் 10ம் வகுப்பு மார்க் சேகரிப்பு

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், இம்மாத கடைசிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு, கடந்த கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு ரத்து செய்யப் பட்டு உள்ளது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 2 மதிப்பெண் நிர்ணயிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பள்ளி கல்வி முதன்மை செயலர் உஷா தலைமையில், மதிப்பெண் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, பல்வேறு தரப்பில் கருத்துகளை பெற்று, மதிப்பெண் கணக்கிடும் முறையை தீர்மானம் செய்துள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 முடித்துள்ள கடந்த ஆண்டு மாணவர்களின், 10ம் வகுப்பு மதிப்பெண் விபரங்களை, பிளஸ் 1ல் மாணவர் சேர்க்கை நடத்திய பள்ளிகள், பட்டியலாக தயாரிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களுடன், பள்ளிகளில் பதிவு செய்துள்ள மதிப்பெண்களையும் சரிபார்த்து, இணையதளத்தில் அறிக்கை பதிவேற்ற, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்