குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி
கோவை: குரூப் 2 தேர்வில் 41 பணியிடங்கள், குரூப் 2ஏ தேர்வில் 780 பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செப்., 9 கடைசி நாளாகும்.இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் இலவச பயிற்சி வகுப்புகள் செப்., 1 முதல் காலை 10:00 மணிக்கு நடக்கின்றன.தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி அளிக்கப்படும். போட்டித்தேர்வு புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பாடவாரியான தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள், இலவச பாடக்குறிப்புகள் மற்றும் 'ஸ்டடி ஹால்' வசதிகள் உள்ளன.டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு தயாராகி வரும் போட்டி தேர்வர்களுக்கான மாதிரி தேர்வுகள் ஆக., 25, செப்., 1, 8, 15, 22, 29, அக்., 6, 13, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும்.பங்கேற்க விரும்புவோர், மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம். தொடர்புக்கு, 93615 76081.