உள்ளூர் செய்திகள்

இசைக்கல்லுாரியில் 23ல் கலைப்போட்டி

கோவை: தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு கலைப்போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கருவியிசை மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில், கோவை மாவட்ட அளவிலான போட்டிகள், மலுமிச்சம்பட்டியில் உள்ள இசைக்கல்லுாரியில் 23ம் தேதி நடைபெற உள்ளது.அன்றைய தினம் காலை, 10:00 மணியில் இருந்து போட்டிகள் நடைபெறும்; குழுவாக பங்கேற்க அனுமதியில்லை. தனி நபராக அதிகபட்சம், 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுவர். முதலிடம் பெறும் இளைஞர்கள், மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். கூடுதல் விபரங்களை, www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம் அல்லது, 89253 57377, 97902 85608 என்ற எண்களில், தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்