பள்ளிகளில் 25 சத சேர்க்கைக்கு அழைப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009ன் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி வரும் கல்வி ஆண்டுக்கு, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு (ஆர்.டி.இ.,) நுழைவு நிலை வகுப்பில் சேர செய்ய விரும்புவோர், மே 18க்குள் rte.tnschools.gov.in இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.எல்.கே.ஜி., வகுப்புக்கு 2022 ஆகஸ்ட் 1 முதல் 2023 ஜூலை 31 வரையிலானோர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குழந்தைகளின் சமீபத்திய போட்டோ, பிறப்பு சான்று, ரேஷன் கார்டு, சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.பெற்றோரின் ஆண்டு வருவாய் இரண்டு லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள், வலைதள மையங்கள், தனியார் பள்ளிகள், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வட்டார வள மையங்களில் இணைய வழி பதிவேற்றம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று, பள்ளிகல்வி துறை அறிவித்துள்ளது.