உள்ளூர் செய்திகள்

சந்திரயான்-3 வெற்றி: சாதித்தது இந்தியா

பெங்களூரு: நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் - 3 விண்கலத்தின், &'லேண்டர்&' சாதனம், நேற்று (ஆக.,23) மாலை 6:04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியது: சந்திரயான் -3 திட்டத்தில் இணைந்து பணியாற்றியவர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்வு வருங்காலத்தில் இதைவிட நிறைய சாதிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இலக்கு சூரியனை ஆராய்ச்சி செய்வது தான் . மேலும் எதிர்காலத்தில் செவ்வாய் வெள்ளி கிரங்கள் குறித்த ஆய்வு களை மேற்கொ்ளளவும் திட்டம் உள்ளது. இவ்வாறு சோம்நாத் கூறினார்.தொலைபேசியில் மோடி வாழ்த்துசந்திரயான் - 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறித்து ஜோஹன்ஸ்பர்க்கிலிருந்து தொலைபேசி வாயிலாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்