உள்ளூர் செய்திகள்

யு.ஜி.சி., நெட் தேர்வு தேதி திடீர் மாற்றம்

சென்னை: யு.ஜி.சி., 'நெட்' தேர்வு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறவும், பி.எச்.டி., என்ற முனைவர் படிப்பில் சேரவும், யு.ஜி.சி., நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.தேசிய தேர்வுகள் முகமை சார்பில், ஆண்டுக்கு இரண்டு முறை யு.ஜி.சி., நெட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், டிசம்பர் மாத நெட் தேர்வு அறிவிப்பு, இம்மாதம் 8ல் வெளியிடப்பட்டது. தேர்வுக்கு வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்தது. டிசம்பர் 14 முதல் 19ம் தேதி வரை தேர்வுகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், யு.ஜி.சி., நெட் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 14 முதல் 18 வரையிலும், டிச., 21ம் தேதியும் யு.ஜி.சி., நெட் தேர்வு நடக்கும் என, தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு மைய விபரம் நவ., 23ம் தேதி வெளியிடப்படும், ஹால் டிக்கெட் டிச., 7ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்