உள்ளூர் செய்திகள்

குரூப்-4ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சியில் நாளை கலந்தாய்வு

திருச்சி: தமிழ்நாடு அரசு அமைச்சு பணி சார்பில் பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான இடத்தை தேர்வு செய்ய திருச்சியில் நாளையும் (25ம் தேதி) நாளை மறுநாளும் கவுன்சலிங் நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் நடத்திய குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 பேர் பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணிக்கு நியமனம் செய்யப்படவுள்ளனர். பணிபுரியும் இடங்களை தேர்வு செய்ய நாளையும், நாளை மறுநாளும் திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளியில் கவுன்சலிங் நடக்கிறது. கவுன்சலிங்கில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கவுன்சலிங்குக்கு வருபவர்கள் அசல் கல்வி சான்று, ஜாதி சான்று, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வழங்கிய பணி ஒதுக்கீடு ஆணை ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்