உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் 47 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைவு

சர்வதேச உணவு தினத்தைக் கொண்டாடி வரும் வேளையில், இந்தியாவில் 6 வயதிற்குபட்ட 47 சதவீதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவு உடையவர்களாக உள்ளனர். இந்த தரவரிசையில் வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளை விட இந்தியா பின்னடைந்துள்ளது. உணவின்றி பசியால் தவிப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உள்ளதே இதற்குக் காரணம்.   பசிக் கொடுமையை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வரும் வளரும் நாடுகளில் இந்தியா 6வது இடத்தில் உள்ளதாகவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1 பில்லியன் மக்கள் பசியால் தவித்து வருவதாகவும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்