துவங்கியது 5 ஆண்டு சட்டப்படிப்பு கவுன்சிலிங்
இங்கு, நான்கு வகை, எல்.எல்.பி., &'ஹானர்ஸ்&' ஐந்தாண்டு படிப்புகளுக்கு, 800 இடங்கள் உள்ளன.அவற்றுக்கு, ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவற்றுக்கு மொத்தம், 5,283 பேர் விண்ணப்பித்தனர்.அதேபோல், மாவட்டங்களில் செயல்படும் சட்ட கல்லுாரிகளில், 2,000 எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புகளுக்கு, 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்களுக்கான, &'கட் ஆப்&' மதிப்பெண், கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. நேற்று, ஆன்லைன் வழி கவுன்சிலிங் துவங்கியது. சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கவுன்சிலிங்கை துவக்கி வைத்தார். மாணவர்களுக்கான, கட் ஆப் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல், இ - மெயில், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., வழியாக அனுப்பப்பட்டு உள்ளதாக, சட்டப் பல்கலை தெரிவித்துள்ளது.