உள்ளூர் செய்திகள்

உறுப்பினராக 63 ஆயிரம் மாணவர்கள்:சாதனை படைத்தது ஈரோடு நூலகம்

ஈரோடு மாவட்ட மைய நூலகம் கண்காணிப்பில் 101 கிளை நூலகம், 124 ஊர்ப்புற நூலகம், எட்டு பகுதி நேர நூலகம் உள்ளது. பொது நூலகத்துறை சார்பில் செப்டம்பர் 16 முதல் நமது உலகம் நூலகம் என்ற புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது.பள்ளி மாணவ, மாணவியரை அதிகப்படியாக நூலகத்தில் உறுப்பினராக சேர்ப்பதே இதன் நோக்கம்.ஈரோடு மாவட்ட நூலக அலுவலர் மணிகண்டன் கூறியதாவது: தமிழகத்திலேயே ஈரோடு மாவட்ட நூலகம்தான் பள்ளி மாணவ, மாணவியரை அதிகப்படியாக உறுப்பினராக சேர்த்துள்ளது. சென்ற அக்டோபர் 1 முதல் 30 வரை அரசு பள்ளியை சேர்ந்த 40 ஆயிரம் மாணவ, மாணவியர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். நவம்பர் 1 முதல் இதுவரை 23 ஆயிரம் மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.தற்போதுள்ள மாவட்ட மைய நூலகத்தில் இடவசதி குறைவாக உள்ளது. எனவே, ஈரோடு சம்பத் நகரில் உழவர் சந்தை அருகே புதிதாக மைய நூலகம் கட்ட, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அதிநவீன டிஜிட்டல் நூலகம் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்