உள்ளூர் செய்திகள்

78 விநாடியில் 1178 தேசிய கொடி வரைந்த சாதனைக்கு சான்றிதழ்

புதுச்சேரி: 78 விநாடியில் 1178 தேசிய கொடிகள் வரைந்த சாதனைக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி அரசு கலைமாமணி விருதாளர் சங்கம், சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு, ஜவகர் கல்வி நிறுவனங்கள் சார்பில், வில்லியனுாரில் 78 வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வாக, 78 மாணவ மாணவியர் பங்கேற்று 78 விநாடிகளில் 1178 தேசியக்கொடிகள் வரைந்து, ஈச் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்தனர்.சாதனை அங்கீகார சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடந்தது. ஈச் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு நிறுவன தலைவர் தமிழ்வாணன் சான்றிதழ் வழங்கினார். மாணவர்களுக்கு சாதனை சான்று மெடல்களை அமைச்சர் சாய் சரவணன்குமார் வழங்கினார்.முன்னதாக பழனி குழுவினரின் பம்பை இசை நிகழ்ச்சியுடன், நடந்த மாணவ மாணவிகளின் பேரணியை எதிர்கட்சி தலைவர் சிவா துவக்கி வைத்தார்.விஜயக்குமார் மோகன் குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சியும், சரவணன் குழுவினரின் பரதநாட்டியம், ஜவகர் கல்வி நிறுவன சிவராஜன், சர்வதேச சுற்றுச்சூழல் நிறுவனர் பூபேஷ்குமார், சங்க தலைவர் அரியபுத்திரி, பொதுச்செயலாளர் ஜோதி கண்ணன், சுவாமிநாதன், தனியார் பள்ளிகள் சங்க தலைவர் ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்