பிப்ரவரி 8ம் தேதி விழுப்புரத்தில் தினமலர் கல்விமலர் நடத்தும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி!
தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில் ஜெயித்துக் காட்டுவோம் கல்வி திருவிழா விழுப்புரத்தில் திருச்சி சாலையில் உள்ள ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நாளை 8ம் தேதி நடக்கிறது. அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 8.00 மணிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு பிற்பகல் 1.00 மணிக்கும் நடக்கிறது. மாணவ, மாணவிகள் பயமின்றி தேர்வை தெளிவாக எழுதவும், நல்ல மதிப்பெண் பெற்று முதன்மையாக தேர்ச்சி பெறவும், சிறப்பு ஆசிரியர்கள் கருத்துரைகள் வழங்குகின்றனர். மாணவ, மாணவியர் பள்ளி சீருடையுடன் குறித்த நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும். ஜெயித்துக் காட்டுவோம் கல்வி நிகழ்ச்சியில் பேனா, நோட்புக், முக்கிய வினா - விடை புத்தகம் ஆகியவை வழங்கப்படும். இவைதவிர, மாணவ, மாணவிகள் உடல் நலம், மன நலம் பாதுகாத்து கொள்வது குறித்த புத்தகங்களும் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம்.