மாவட்டத்தில் 8698 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் 8698 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவங்கி வைத்தார்.இதில் கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், அசோகன் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் முதற்கட்டமாக 573 விலையில்லா மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து அரசு, உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 8698 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் பணியும் துவங்கி வைக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கேசவதாசன், நகராட்சித் தலைவர் மாதவன், உள்பட பலர் பங்கேற்றனர்.