உள்ளூர் செய்திகள்

அதிகரிக்கும் CAT தேர்வர்கள் எண்ணிக்கை

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, இந்தாண்டு 2.5 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பிக்க இன்னும் 25 நாட்கள் உள்ள நிலையில், தற்போது வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 (1.2 லட்சம்) சதவீதத்தை தாண்டியுள்ளது. கேட் தேர்வுக்கு ஆன்லைனில் செப்.26 வரை விண்ணப்பிக்கலாம். 2008ம் ஆண்டுக்குப் பின், கேட் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை குறையத் தொடங்கி, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது 2008ல் 2.14 லட்சமாக இருந்த தேர்வர்களின் எண்ணிக்கை, 2010ல் 2.04 லட்சமாகவும், 2011ல் 2.05 லட்சமாகவும் இருந்தது. இந்தாண்டு தேர்வர்களின் எண்ணிக்கை 2.5லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்களின் எண்ணிக்கை அதிகமாகும் காரணத்தால், இந்தாண்டு ஐ.ஐ.எம்., பி-ஸ்கூல்களில் சேர்வதற்கு போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு அக்.16 தொடங்கி, நவம்பர் 11 வரை ஆன்-லைனில் நடக்க இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்