10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வரின் திறனாய்வு தேர்வு
சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு 2025-26 கல்வியாண்டில் 2026 ஜன., 31ம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வில், 1,000 மாணவர்கள் (500 மாணவர்கள், 500 மாணவிகள்) தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒரு கல்வியாண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் கணிதம், இரண்டாம் தாள் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் நடக்கும். மாணவர்கள் www.dge.tn.gov.in இணையதளத்தில் டிசம்பர் 18 முதல் 26 வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.50 தேர்வு கட்டணம் இணைத்து, டிசம்பர் 26-க்குள் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.