உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு சான்றிதழில் பிழைகளை திருத்தலாம்!

சென்னை: பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களில், பிழைகளை திருத்தம் செய்து கொள்ள, அரசு தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, அரசு தேர்வுத் துறை இணை இயக்குனர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களில், தமிழ், ஆங்கிலத்தில் மாணவர், பெற்றோர், பள்ளியின் பெயர்கள், தேர்வர்களின் தலைப்பெழுத்து, பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவற்றில் திருத்தம் தேவைப்பட்டால் மேற்கொள்ளலாம். திருத்தம் தேவைப்படும் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை, தலைமை ஆசிரியர்கள் பெற்று, மாற்றுச் சான்றிதழ்களை இணைத்து, செப்., 8ம் தேதிக்குள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.அவற்றை, உதவி இயக்குனர்கள் வரும் 9ம் தேதி முதல் 22ம் தேதி வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றுவர். தனி தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் தேவைப்பட்டால், அதை உரிய ஆவணங்களுடன் இணைத்து, தலைமை அலுவலகத்துக்கு உதவி இயக்குனர்கள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்