10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு
சென்னை: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இரு தேர்வுகளையும் சேர்த்து, 50 ஆயிரம் பேர் வரை எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வுகள், வரும், 23ம் தேதி துவங்கி, அக்., 5ம் தேதி வரை நடக்கின்றன. 10ம் வகுப்பு தனித்தேர்வுகள், வரும், 23ல் துவங்கி, அக்டோபர், 1ம் தேதி வரை நடக்கிறது. இதன் முடிவுகள், நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும்.