உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு மார்ச் 18; பி.யு.சி., ஏப்., 25 பொது தேர்வுகள் அட்டவணை வெளியீடு

பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வும்; ஏப்ரல் 25ம் தேதி பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வும் துவங்குகிறது.கர்நாடகாவில், 2025 - 2026ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி துவங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கிறது. பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 25 முதல் மே 9ம் தேதி வரை நடக்கின்றன.எஸ்.எஸ்.எல்.சி., ஜூனியர் தொழில்நுட்ப பாடப்பிரிவு மாணவர்களுக்கு, 56, 57, 58, 59 பாடப்பிரிவுக்கான தேர்வுகள், ஏப்ரல் 4ம் தேதி அவர்களின் பள்ளிகளிலேயே நடக்கும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு அட்டவணை மார்ச் 18-கன்னடம், தமிழ், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, உருது, ஆங்கிலம், ஆங்கிலம் (என்.சி.இ.ஆர்.டி., பாடபிரிவு)சமஸ்கிருதம்; மார்ச் 23- அறிவியல், அரசியல் அறிவியல், ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை; மார்ச் 25-ஆங்கிலம், கன்னடம்; மார்ச் 28-கணிதம், சமூகவியல்; மார்ச் 30- ஹிந்தி(என்.சி.இ.ஆர்.டி., பாடபிரிவு) ஹிந்தி, கன்னடா, ஆங்கிலம், அரபி, உருது, சமஸ்கிருதம், கொங்கனி, துளு, மராத்தி. என்.எஸ்.கியு.எப்., எனும் தேசிய திறன் தகுதி கட்டமைப்பு பாடங்களான தகவல் தொழில்நுட்பம், சில்லறை வணிகம், ஆட்டோமொபைல், அழகு மற்றும் ஆரோக்கியம், ஹோம் பர்னிசிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் ஹார்டுவேர்; ஏப்ரல் 1- ஜூனியர் தொழில்நுட்ப பள்ளி பாடப்பிரிவான மின்பொறியியல் கூறுகள் - 4; இயந்திர பொறியியல் கூறுகள் - 4; மின்ணணு பொறியியல் கூறுகள் - 4 மற்றும் பொருளாதாரம்; ஏப்ரல் 2- சமூக அறிவியல்பி.யு.சி., தேர்வு அட்டவணை ஏப்ரல் 25- கன்னடம், அரபி; ஏப்ரல் 27- விருப்ப கன்னடம், கணக்கியல், உயிரியல்; ஏப்ரல் 28-அரசியல் அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல்; ஏப்ரல் 29- கணிதம், வீட்டு அறிவியல், அடிப்படை கணிதம்; ஏப்ரல் 30-பொருளாதாரம்; மே 2- வரலாறு, வேதியியல்; மே 4- ஆங்கிலம்; மே 5- ஹிந்தி; மே 6- வணிக படிப்பு, இயற்பியல்; மே 7- சமூகவியல், புள்ளியியல்; மே 8- புவியியல், உளவியல், விலங்கியல்; மே 9-தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, உருது, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஹிந்துஸ்தானி இசை, எலக்ட்ரானிக்ஸ் அன்ட் ஹார்டுவேர், ஹோம் பர்னிசிங், தகவல் தொழில்நுட்பம், சில்லறை வணிகம், ஆட்டோமொபைல், அழகு மற்றும் ஆரோக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்