உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு துணைத்தேர்வு

திருப்பூர்: கடந்த, 10ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது. மாவட்டத்தில் தேர்வெழுதிய, 30 ஆயிரத்து, 180 பேரில், 14 ஆயிரத்து 659 மாணவியர் தேர்ச்சி பெற்றனர். 2,301 பேர் தேர்ச்சி பெறவில்லை.இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத, தேர்வெழுத விரும்பும் மாணவர்களுக்கு ஜூலை 2 முதல், 8 வரை துணைத்தேர்வை தேர்வுத்துறை நடத்துகிறது. இத்தேர்வெழுத விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் மாவட்ட கல்வி அலுவலக சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஜூன், 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அறிவியல் செய்முறை தேர்வு பயிற்சியில் பங்கேற்கவுள்ள தனித்தேர்வர்கள், 125 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே, விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்