உள்ளூர் செய்திகள்

100 நாட்கள் வகுப்பு கட்டாயம் பி.எட்., கல்லுாரிகளுக்கு உத்தரவு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு பெற்று, மாநிலம் முழுதும், 650க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், பி.எட்., எம்.எட்., படிப்பு கள் நடத்தப்படுகின்றன.இந்த கல்லுாரிகளில் சிலவற்றில், முறையாக வருகைப்பதிவு பராமரிப்பதில்லை என்றும், தேவையான அளவுக்கு மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவதில்லை என்றும், புகார்கள் எழுந்துஉள்ளன. இந்நிலையில், பி.எட்., கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:ஒவ்வொரு கல்வியி யல் கல்லுாரியும், தேசிய கல்வியியல் கவுன்சிலின் விதிப்படி, ஒவ்வொரு செமஸ்டர் தேர்விலும், 100 வேலை நாட்களுக்கு வகுப்பு நடத்த வேண்டியது கட்டாயமாகும்.வகுப்புகள் நடத்துவது தொடர்பாக, தமிழக உயர்கல்வி துறையால், அவ்வப்போது வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இதன்படி, பி.எட்., எம்.எட்., மாணவர்களில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டுக்கு, வரும், 18ம் தேதி, அடுத்த செமஸ்டர் தேர்வுக்கான வகுப்புகள் துவங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்