ரூ.100 கோடியில் மருத்துவ ஆராய்ச்சி மையம்: மா.சுப்பிரமணியன்
சென்னை: எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரியில் ரூ.100 கோடியில் மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், ஒரு மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி மையம், கருணாநிதி நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி முடிவடைந்தது, என்றார்.