உள்ளூர் செய்திகள்

100 மாற்றுத்திறனாளிகள் பணியிடங்களுக்கு தேர்வு

சென்னை: தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து, திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாமை, மயிலாப்பூரில் நேற்று நடத்தின.முகாமில், முன்னணி நிறுவனங்கள் உட்பட 21 தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், நேர்காணல் நடத்தினர். பல்வேறு பகுதிகளில் இருந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் மேற்படிப்பு படித்த 265 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.அவர்களில் 100க்கும் மேற்பட்டோர், தொழில் நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஆணை விரைவில் வழங்கப்படும் என, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்