உள்ளூர் செய்திகள்

10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்குத் தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு, &'நோட்டீஸ்&' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில், கடந்த பிப்ரவரியில், சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு, கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த சட்டத்துக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதற்கிடையில், வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அபிஷ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்