உள்ளூர் செய்திகள்

11, 12ல் பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி பெரியார் பல்கலை மாணவர்களுக்கு அழைப்பு

ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில் உள்ள கலைஞர் ஆய்வு மையம் சார்பில், அண்ணா பிறந்தநாள், ஈ.வெ.ரா., பிறந்தநாள், கருணாநிதி சிறப்பு பொழிவு ஆகிய ஒருங்கிணைந்த விழா, வரும், 17ல், பெரியார் பல்கலையில் நடக்க உள்ளது.இதை முன்னிட்டு, பல்கலை துறைகள், தர்மபுரி முதுநிலை விரிவாக்க மையம் மற்றும் பல்கலை இணைவு பெற்ற கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, துணைவேந்தர் நிர்வாக குழு உறுப்பினர் சுப்ரமணி தலைமையில், போட்டிகள் நடக்க உள்ளன.அதன்படி வரும், 11ல், சமூக நீதி நாயகர்கள்; சுயமரியாதை சுடர்கள்; பகுத்தறிவின் அறிவியல் ஆகிய தலைப்புகளில் பேச்சு போட்டி; 12ல் அண்ணாவின் மொழி நயம்; கலைஞரின் பண்பாட்டு புரட்சி; உலகமயமாகும் பெரியார் தலைப்புகளில் கட்டுரை, கவிதை போட்டிகள் நடக்க உள்ளன. ஒவ்வொரு கல்லுாரிகளில் இருந்து, போட்டிக்கு ஒருவர் வீதம் மாணவர்கள் பங்கேற்கலாம். கல்லுாரி முதல்வரிடம், அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, வரும், 17ல் நடக்க உள்ள விழாவில், பரிசு, சான்றிதழ் வழங்கப்படும் என பெரியார் பல்கலை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்