16 நிகர்நிலைப் பல்கலைகளில் குறைபாடு இல்லை: யு.ஜி.சி.,
130 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீதான புகார்கள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு நடத்தி வருகிறது. மொத்தம் 62 பல்கலைக்கழகங்கள் மீது குறைபாடுகள் எதுவும இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்து விட்டது. அண்மையில் சந்தித்த பல்கலைக்கழக மானியக் குழு, மேலும் 16 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் எந்தவிதக் குற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆய்வு அறிக்கை, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆராய, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கெனவே தனியே நிபுணர் குழுவை அமைத்துள்ளது.