உள்ளூர் செய்திகள்

1,695 சட்டவிரோத பள்ளிகள் மது பங்காரப்பா எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் சட்ட விரோதமாக இயங்கி வரும் 1,695 பள்ளிகள் படிப்படியாக மூடப்படும். இதுபோன்ற பள்ளிகள் இயங்கினால், அந்தந்த பிளாக் கல்வி அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும், என தொடக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று, கர்நாடக கல்வி மேலாண்மை சங்கத்தினருடன், தொடக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா ஆலோசனை நடத்தினார். இதில், அவர் பேசியதாவது:கர்நாடகாவில் சட்ட விரோதமாக பள்ளிகள் இயங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை சங்கத்தினர் தெரிவித்தனர். மொத்தம் 1,695 பள்ளிகள் சட்ட விரோதமாக இயங்கி வருகின்றன. ஒரே நேரத்தில் அனைத்தையும் மூட முடியாது. படிப்படியாக மூடப்படும். இதில், 190 பள்ளிகள், கல்வித் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் தங்கள் இருப்பிடத்தை மாற்றி உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.இம்மாதம் 14ம் தேதிக்குள், சட்ட விரோதமாக இயங்கும் அனைத்து பள்ளிகளை மூட வேண்டும் என கடந்த 9ம் தேதி, அனைத்து மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்