உள்ளூர் செய்திகள்

174 தொழில்நுட்ப படிப்புகளுக்கு 11 மாநில மொழிகளில் பாடங்கள்

சென்னை: ஆன்லைனில் நடத்தப்படும், 174 தொழில்நுட்ப படிப்புகளுக்கு, தமிழ் உள்ளிட்ட 11 மாநில மொழிகளில், பாடங்கள் மொழி மாற்றப்பட்டுள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:கல்லுாரி மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி.,க்கள் சார்பில், என்.பி.டெல்., என்ற இணையதளத்தில், நுாற்றுக்கணக்கான ஆன்லைன் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகள், ஆங்கில வழியில் மட்டுமே இருந்த நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளில், இந்த பாடங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, ஹிந்தி, கன்னடம், குஜராத்தி, வங்கம் மற்றும் அசாமி ஆகிய, 11 மொழிகளில், பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக, 682 மொழி பெயர்ப்பாளர்கள், 51 தரக்கட்டுப்பாட்டு நிபுணர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும், 159 தமிழ் இ - புத்தகங்கள் என்.பி.டெல்லின், https://nptel.ac.in/translation இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, என்.பி.டெல்., மொழி பெயர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், சென்னை ஐ.ஐ.டி.,யின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் பேராசிரியருமான ராஜேஷ் குமார் கூறுகையில், ஒவ்வொரு மொழிக்கும், அதற்கென தனி உலகம் உண்டு. எனவே, அந்தந்த மொழிகளில் பாடங்கள் அமைய வேண்டியது முக்கியம். அந்த பணிகளில் என்.பி.டெல்., ஈடுபட்டுஉள்ளது என்றார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்